vadivelu starring naai sekar returns movie new update

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர்சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைசுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தைஇயக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டிருந்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e0b1a009-ddcd-473c-9370-a20f407f6766" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_28.jpg" />

Advertisment

இந்நிலையில்நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்பற்றியஅறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதால்இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.